Skip to main content

Posts

தகிக்கும் தென்றல் புழுக்கத்தின் அசைவில் இருந்து வீசத்தொடங்கியது தென்றல் மலர்கள் பொசுங்க இலைகள் வதங்க கைகளை வீசி நடந்தது மணல் பெருகிய நதியில் மிதந்து தகித்தது தண்ணீருக்காக அலைந்து கொண்டிருந்த மான்களின் ரோமங்கள் தீய்ந்து கருக தழுவிச் சோர்ந்து தவித்தது வியர்வையின் துளியில் உயிர்த்தது நதி.
மரிக்காத கனவுகள் தேநீரின் ஆவி நாசிகளைத் தழுவுகிறது இருவரும் எதிரெதிரில் அசையாமல் முகம் இறுக மனம் அவிழ்ந்து சிதறுகிறது உருண்டோடிய பல ஆண்டுகளை சேகரித்து வந்த ஆயாசம் அவள் முகத்தில் மௌனித்துக் கிடந்த உணர்ச்சிகளின் ஊடாக கிளர்ந்து கனிகிறது முதிர்ந்த யௌவனம் எங்களைச் சுற்றி உடைந்து சிதறிக்கிடக்கும் வாழ்வுத்துண்டுகளில் தேடித் தேடிக் களைக்கிறோம் பெருக்கெடுக்கும் இறந்த காலத்தின் நதியின் அடியில் இப்போது நீந்தித் திளைக்கிறோம் மரிக்காத கனவுகளை மீன்களைப் போல் தின்று சுகிக்கிறோம்
ஆனாலும்... திரும்பிப் பார்க்க என்ன இருக்கிறது ஆனாலும் பார்க்கிறேன் பசுஞ்சோலை பூமரங்கள் குளிர்ந்த நீரூறும் சுணை மெல்லிய காற்று இதமான வெயி்ல் அழகிய பெண்கள் என் வழியில் இப்படி எதுவும் தென்பட்டதில்லை இருந்தாலும் என்ன கடப்பும் நடப்பும் தொடர்கிறது ..................... என் புன்னகையின் வெறுமை உங்களைச் சங்கடப் படுத்தக் கூடும் எனை மறைத்துக் கொள்ளும் சாகசம் அது வேறென்ன செய்ய சிரிப்பென்ன வேண்டிக் கிடக்கிறது கேள்வி சரிதான் பதிலாகவும் சிரிப்புதான் வருகிறது அழுவதற்குக் கூடக் கற்றுத் தராத 50 ஆண்டுகால வாழ்வின் மீகு கோபமாய் வருகிறது. ....................... சரி ....  புறப்படுவோம் உரையாடலை முடிக்காமலே பிரியும் வலி நாட்கள் மாதங்கள் ஆண்டுகள் என வாழ்வின் நிழலாக தொடரும் நமது உரையாடல் வழியாக எந்த ஜன்னலும் திறக்கவில்லை உயிரற்ற சொற்களின் அடர்த்தியில் கைகள் குலுக்க முடியாமல் கனத்துப் போயின குரூரமும், துரோகமும், வஞ்சனையும் கனன்றடங்கிச் சாம்பலென உதிரும் உன் வார்த்தைகள் படிந்து மங்கியது என் மனவெளி எனினும் என்ன தொண்டைக்கும் வயிறுக்குமாய் உருளும் இ...

உயிர்ப்பு

பக்கென்ற ஒலியுடன் பறக்கின்றன பட்சிகள் தப்பு, கொம்புகளின் ஒலி உச்சத்தை எட்ட விண்ணெண அதிர்கிறது வெளி அங்கும் இங்குமாய் அலை மோதிய ஈ ஒன்று சவத்தின் மீது வந்தமர்கிறது ஓலமும், ஒப்பாரியும் உன்மத்தம் கொண்டு சூழலில் உறைகின்றன சவத்தைச் சுமந்து சவங்களின் ஊர்வலம் நீண்ட மழையின் ஓய்வு ஈரநாவு கொண்டு மெல்லிய சலனங்களையும் கூட விழுங்கிக் கொண்டிருந்தது இலையில் இருந்து வீழும் ஒரு துளி வெள்ளமென பெருக்கெடுக்கிறது சவத்துக்கு உயிர் வந்ததும் சுமக்க இலகுவாய் இருந்தது. மேனா. உலகநாதன்
எனது 20 களில் கவியரங்கம் ஒன்றிற்காக  எழுதப்பட்ட தமிழ் வாழ்த்து   அண்டம் பிறக்குமுன் ஆளப்பிறந்ததால் அகிலத்தில் பழமையானாய் - இன்று கண்டவர் எழுதியும் கலைநயம் மிளிர்வதால் புதுமைக்கும் புதுமையானாய் என்றோ பிறந்த நீ இன்றும் இளமையாய் இருப்பதும் மாயமன்றோ – ஆழி கொண்டும் அழிந்திடா குன்றாப் புகழினால் கொண்டபேர் நிலைக்குமன்றோ! முன்பு வளர்ந்தனை மூவகைச் சங்கத்தில் முத்தமிழ்ச் செல்வமென்றே – உந்தன் மூன்று குழந்தைகள் ஆண்ட பெருமையை முழங்கடி வந்து நின்றே அள்ளும் சிலம்பிலே வள்ளுவன் வாயிலே துள்ளுமுன் இளைய மேனி – பண்டை சொல்லும் அழகிலே சுவையின் வனப்பிலே வெல்லும் நீ மொழியில் ராணி! எண்ணத்திரையிலே ஏதோ கிறுக்கினாய் வண்ணங்கள் புரியவில்லை – எந்தன் இதயக் கதவினை எதுகொண்டு தட்டினாய் இன்னும் உறங்கவில்லை கன்னக் கதுப்பினில் கதைபல சொன்ன என் காதலி மறக்க வைத்தாய் – அவள் கலவியில் பிரிவினில் கண்டு மயங்கிய போதையை மாற்றிவிட்டாய் சின்னக் குழந்தையின் சித்திரம் போலொரு சன்ன ஒளிக்கீற்றாய் – என்னுள் மின்னிச் சிரித்திடும் மின்மினிக் கூட்டமாய்க் கண்ணைச் சிமிட்டி நின்றாய் உள்ளக் கருத...

சுடுகாட்டில் வீசும் தென்றல்…

நிண நாற்றம் சகிக்க முடியவில்லை நடு நிசி நாய்களின் குரூர வேட்கையும்தான் ஊழல் தீயின் தகிப்பில் கனன்றடங்கிச் சாம்பலாகிறது ஜனநாயகத்தின் ஒவ்வொரு உயிர்த்துளியும் சுடுகாட்டில் வீசும் தென்றலாக தேர்தல் விரிந்த ‘கை’கள் இப்போது கூப்பியபடி தமிழர்களிடம் வாக்கு கேட்டு… ஈழரத்தம் ருசித்த மூவண்ண நாவுகளுக்கு இன்னும் அடங்கவில்லை தமிழ்க் குருதி வேட்கை தமிழர்களின் அரசியலை பிரித்துப் போட்டு கலைத்து விளையாடி ரசித்துச் சிரிக்கிறாள் டெல்லி மோகினி சுவைக்காத மாங்கனி சீற்றம் தணிந்த சிறுத்தை சாட்டை இழந்து ஓரமாய்ச் சரிந்த பம்பரம் என தமிழ்க் கூறுகள் அனைத்தும் தன்னளவில் நீர்த்துப் போனது கண்டு அவளுக்கு தாழவில்லை பெரு மகிழ்ச்சி இங்கோ ராஜாஜிக்குப் பிறகு தம் குலத்துக்குக் கிடைத்த தலைமை போய்விடுமோ என்று பதறும் மற்றொரு கூட்டம்…. போதையில் தள்ளாடியபடி புரட்சி பேசி முரசு கொட்டும் முட்டாள் நடிகர் அவர் மூலமேனும் பொதுவுடைமை மலருமா என ஏங்கித்தவிக்கும் இலக்கிலா இடதுகள்…. பிரபலமான கோமாளிகள் என்ற பேரில் நாத்தழும்பேறப் பேசும் வடிவேல்களாம் அரசியல் ஈசல்கள் தண்ணீரைவிட ரத்தம் கெட்டியானது என ஸ்ரீ ரங்கத்துச் சொந்தங்களிடம் தஞ்...
ஒற்றைகளின் மரணம் குரல்களின் கூட்டம் பெரிதாய் ஒலிக்கிறது பெருகிவழியும் இத்திரளில் எதிர்த்திசை சுட்டி ஒற்றைகள் சில. முகத்திலறைந்தும் உமிழ்ந்தும் விரட்டிய பின்னரும்… தேடுதலற்றுத் திரும்ப மனமின்றி இலக்கை நோக்கி திமிறியபடியே முன்னேறி மூர்ச்சித்து மரிக்கும் ஒற்றைகள் குற்றுயிராய்த் துடிக்கும் அவற்றின் குவியல் மீது கம்பீரமாய் அணிவகுக்கும் குரல்களின் கூட்டம் குதிபோடும் பெருங்குரல்களின் கூச்சலிடையே பேரொலியாய் முணகும் ஒற்றையொன்று ‘மரணம் எமக்கல்ல’. மேனா.உலகநாதன்