Skip to main content

Posts

Showing posts from December 27, 2010
26.12.10, தினமலர் செய்திமலர் நெல்லைப் பதிப்பில் வெளிவந்தது  படித்தவர்கள்தான் செய்கிறார்கள்…! “படித்தவன் பாவமும் சூதும் பண்ணினால் போவான் போவான் ஐயோ என்று போவான்” பசியும், பட்டினியுமாகச் செத்துப்போன மகாகவி பாரதியின் அழுத்தமான நம்பிக்கை இது. இப்போது இந்த வரிகளுக்கு எந்த அளவு அர்த்தப் பொலிவு இருக்கிறது என்று தெரியவில்லை. படிக்காதவன், ஓடும் பேருந்தில் ‘பிக்பாக்கெட்’ அடிக்கிறான். பூட்டியிருக்கும் வீட்டை உடைத்து கொள்ளையடிக்கிறான். அவனுடைய திருட்டின் எல்லை அவ்வளவுதான். படித்தவர்களும், பெரும் பதவியில் இருப்பவர்களும் செய்யும் திருட்டுகள் கற்பனைக்கு எட்டாதவையாக இருக்கின்றன. சமூகத்தின் பெரும்பாலான சீரழிவுகளுக்கும் மெத்தப்படித்த மேல்தட்டினரே காரணமாக இருக்கிறார்கள் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2001ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் படி, தமிழகத்தின் ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி போன்ற பின் தங்கிய பகுதிகளில், 1000 ஆண்குழந்தைகளுக்கு சராசரியாக 925 முதல் 850 பெண்குழந்தைகள் மட்டுமே உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டதாக, பெண் சிசுக்கொலை...