Skip to main content

Posts

Showing posts from February 26, 2011
எதற்கு இந்த இரட்டை வேடம்? “இந்த அரசுக்கு பதின் ஆண்டுகளின் ( Decades) தொடக்கம் எது என்பதே இன்னும் தெரியவில்லை. கடந்த 2010ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரைத் தொடங்கி வைத்து உரையாற்றிய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், இதே போன்று பதின் ஆண்டுகள் தொடங்குவதாக கூறினார். இந்த ஆண்டும் உரையின் தொடக்கத்தில் அதையே கூறுகிறார். இதில் இருந்தே இந்த அரசின் உணர்ச்சியற்ற தன்மையைப் புரிந்து கொள்ள முடிகிறது” மக்களவையில், குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலின் உரைக்கு நன்றி தெரிவித்துப் பேசிய மார்க்சிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் பிரகாஷ்காரட்,  இப்படித்தான் தமது உரையைத் தொடங்கினார். அவரது இந்த விமர்சனத்தை வெறும் அரசியல் நையாண்டியாகப் புறந்தள்ளி விட முடியவில்லை. ஒரு குடியரசுத் தலைவரின் உரையில் கடந்த ஆண்டு இடம்பெற்ற அதே உறுதி மொழிகளும், கருத்துருக்களும் இந்த ஆண்டும் இடம்பெறுவது, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள எவரையும் ஆத்திரப்பட வைப்பதில் வியப்பில்லை. விலைவாசி உயர்வையும், பணவீக்கத்தையும் கட்டுப்படுத்துவதில் இதே மெத்தனப்போக்கை இந்த அரசு காட்டிவருவதாகவும்  பிரகாஷ் காரட் அப்போது குற்றம்சாட்ட...