Skip to main content

Posts

திராவிட இயக்க முன்னோடி டாக்டர் சி.நடேசன் : க.சோமாஸ்கந்தன்

Recent posts

நீதிக்கட்சி வரலாறு: விடுதலை இராசேந்திரன்

பெரியார் முழக்கம், 2006, 26 ஜூன் தென்னிந்திய வரலாற்றில், இருபதாம் நூற்றாண்டின் முதல் இருபதுகளில் நீதிக் கட்சியின் தோற்றம் குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமைந்தது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், 3 சதவீத மக்கள் தொகை கொண்ட பார்ப்பனர்கள் மொத்த சமுதாயத்தின் அரசியல், பொருளாதாரக் களங்களில் ஆதிக்கம் பெற்றிருந்தனர். பார்ப்பனர், பார்ப்பனரல்லாதவரிடையே பெரும் இடைவெளி இருந்தது. நீதிக்கட்சி அந்த இடைவெளியைக் குறைக்க வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கேட்டது. அக்கட்சியின் கோட்பாடுகள், திட்டங்களைத் தெளிவாக ஆய்வு செய்தால், அதனுடைய வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்பது சமூக நீதிக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது என விளங்கும். இத்தகு சூழலில், பார்ப்பனரல்லாத சமூகத்தைச் சார்ந்த தலைவர்களின் எழுத்துக்கள் வாயிலாகவும், ஆங்கிலேயக் கல்வியாளர்கள் வாயிலாகவும், பார்ப்பனரல்லாதவர்கள் எல்லாம் இனவழியே திராவிடர்கள் என்ற உணர்வும் வெளியாயிற்று. பார்ப்பனரல்லாத பிரிவினர் தம் நலன்களைப் பாதுகாக்க ஓர் இயக்கத்தை உருவாக்கினர். 1916 ஆம் ஆண்டு பார்ப்பனரல்லாச் சமூகத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த தலைவர்களில் சிலர், சென்னை மையப் புகைவண்டி நி

அயோத்தி பாபர் மசூதி இடிப்பும், ராமர் கோயில் அரசியலும் - 165 ஆண்டு வரலாறு

  BBC Tamil   அயோத்தி பாபர் மசூதி இடிப்பும், ராமர் கோயில் அரசியலும் - 165 ஆண்டு வரலாறு   9 நவம்பர் 2019 புதுப்பிக்கப்பட்டது 6 டிசம்பர் 2020     பாபர் மசூதியில் காணப்பட்ட கல்வெட்டுகள் மற்றும் அரசு ஆவணங்களின்படி பார்த்தால், 1528 - 1530 காலக்கட்டத்தில் அயோத்தியில் ராம் கோட் மொகல்லாவில் மலைக்குன்றில் முகலாய சக்ரவர்த்தி பாபரின் உத்தரவின் பேரில் அவருடைய ஆளுநர் மீர் பாகி என்பவரால் இந்த மசூதி கட்டப்பட்டுள்ளது.   ஆனால் பாபர் அல்லது பாகி இந்த நிலத்தை எப்படி வசப்படுத்தினார்கள் என்பது பற்றியும், மசூதி கட்டுவதற்கு முன்பு அங்கே என்ன இருந்தது என்பது பற்றியும் எந்த ஆவணங்களும் கிடையாது.   முகலாய மன்னர்கள், நவாப்கள், பிற்காலத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்தாரால் இந்த மசூதியின் பராமரிப்புக்கு குறிப்பிட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்துள்ளது .   பல சமயங்களில் இந்த இடம் தொடர்பான சர்ச்சையில் உள்ளூர் இந்துக்கள், முஸ்லிம்களுக்கு இடையே மோதல்கள் நடந்திருப்பதாகத் தகவல்கள் உள்ளன.   1855ல் நவாப் ஆட்சிக் காலத்தில் ஏராளமான முஸ்லிம்கள் பாபர் மசூதி அருகே திரண்டு, சுமார் நூறு கிலோ மீட்டர் த