Skip to main content

Posts

Showing posts from January 11, 2024

திராவிட இயக்க முன்னோடி டாக்டர் சி.நடேசன் : க.சோமாஸ்கந்தன்

  சிந்தனையாளன், 7, பிப்ரவரி 2017 அன்பும் அருளும் தயையும் நிறைந்த பெருந்தகை, பகையும் வஞ்சமும் இன்றி ஒளிர்ந்த ஒப்பற்ற மனிதர், பணம், பட்டம், பதவி, ஆட்சி அதிகாரம் என எதைப் பற்றியும் சிந்தியாது பொது நலமே தன் நலம் என்று வாழ்ந்த மாமனிதர், பிராமணரல்லாத மக்களின் வாழ் வியல் உரிமைகளுக்காகத் தம் வாழ்நாள் முழுவதும் உழைத்த உத்த மர் டாக்டர் சி. நடேசன் அவர்கள், திராவிட இயக்கத்தின் முன்னோடித் தலைவர்களில் முதல்வராகத் திகழ்ந்த வர். திருவல்லிக்கேணி பெரிய தெரு எனப்படும் வீரராகவ முதலியார் தெரு வில் வாழ்ந்த கிருஷ்ணசாமி முதலியாரின் புதல்வ ராக, 1875இல் நானிலம் போற்றும் நடேசன் பிறந்தார். திருவல்லிக்கேணியில் தொடக்கப் பள்ளியில் பயின்ற அவர் சென்னைப் பல்கலைக்கழகத் தில் இளங்கலை (BA) பட்டம் பெற்றார். பின்னர், ஆர். வெங்கடரத்தினம் நாயுடு தலைமையில் நடந்துவந்த பித்தாபுரம் மகாராஜ கல்லூரியில் உடலியல் (Physiology) விரிவுரையா ளராகச் சிறிது காலம் பணியாற்றினார். மருத்துவச் சேவை ஏழை எளியோர்க்குத் தொண்டு புரிய வேண்டும் என்ற எண்ணம் அவரிடம்  மேலோங்கி நின்றது. சேவை புரிதற்குரிய துறை மருத்துவத் துறை என உணர்ந் தார். சென்னை ம...

நீதிக்கட்சி வரலாறு: விடுதலை இராசேந்திரன்

பெரியார் முழக்கம், 2006, 26 ஜூன் தென்னிந்திய வரலாற்றில், இருபதாம் நூற்றாண்டின் முதல் இருபதுகளில் நீதிக் கட்சியின் தோற்றம் குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமைந்தது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், 3 சதவீத மக்கள் தொகை கொண்ட பார்ப்பனர்கள் மொத்த சமுதாயத்தின் அரசியல், பொருளாதாரக் களங்களில் ஆதிக்கம் பெற்றிருந்தனர். பார்ப்பனர், பார்ப்பனரல்லாதவரிடையே பெரும் இடைவெளி இருந்தது. நீதிக்கட்சி அந்த இடைவெளியைக் குறைக்க வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கேட்டது. அக்கட்சியின் கோட்பாடுகள், திட்டங்களைத் தெளிவாக ஆய்வு செய்தால், அதனுடைய வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்பது சமூக நீதிக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது என விளங்கும். இத்தகு சூழலில், பார்ப்பனரல்லாத சமூகத்தைச் சார்ந்த தலைவர்களின் எழுத்துக்கள் வாயிலாகவும், ஆங்கிலேயக் கல்வியாளர்கள் வாயிலாகவும், பார்ப்பனரல்லாதவர்கள் எல்லாம் இனவழியே திராவிடர்கள் என்ற உணர்வும் வெளியாயிற்று. பார்ப்பனரல்லாத பிரிவினர் தம் நலன்களைப் பாதுகாக்க ஓர் இயக்கத்தை உருவாக்கினர். 1916 ஆம் ஆண்டு பார்ப்பனரல்லாச் சமூகத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த தலைவர்களில் சிலர், சென்னை மையப் புகைவண்டி நி...

அயோத்தி பாபர் மசூதி இடிப்பும், ராமர் கோயில் அரசியலும் - 165 ஆண்டு வரலாறு

  BBC Tamil   அயோத்தி பாபர் மசூதி இடிப்பும், ராமர் கோயில் அரசியலும் - 165 ஆண்டு வரலாறு   9 நவம்பர் 2019 புதுப்பிக்கப்பட்டது 6 டிசம்பர் 2020     பாபர் மசூதியில் காணப்பட்ட கல்வெட்டுகள் மற்றும் அரசு ஆவணங்களின்படி பார்த்தால், 1528 - 1530 காலக்கட்டத்தில் அயோத்தியில் ராம் கோட் மொகல்லாவில் மலைக்குன்றில் முகலாய சக்ரவர்த்தி பாபரின் உத்தரவின் பேரில் அவருடைய ஆளுநர் மீர் பாகி என்பவரால் இந்த மசூதி கட்டப்பட்டுள்ளது.   ஆனால் பாபர் அல்லது பாகி இந்த நிலத்தை எப்படி வசப்படுத்தினார்கள் என்பது பற்றியும், மசூதி கட்டுவதற்கு முன்பு அங்கே என்ன இருந்தது என்பது பற்றியும் எந்த ஆவணங்களும் கிடையாது.   முகலாய மன்னர்கள், நவாப்கள், பிற்காலத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்தாரால் இந்த மசூதியின் பராமரிப்புக்கு குறிப்பிட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்துள்ளது .   பல சமயங்களில் இந்த இடம் தொடர்பான சர்ச்சையில் உள்ளூர் இந்துக்கள், முஸ்லிம்களுக்கு இடையே மோதல்கள் நடந்திருப்பதாகத் தகவல்கள் உள்ளன.   1855ல் நவாப் ஆட்சிக் காலத்தில் ஏராளமான முஸ்லிம்கள் பாபர் மசூ...