Skip to main content

Posts

Showing posts from October 7, 2010

தீண்டப்படாத தீண்டாமை ஒழிப்பு!

கடந்த 3.10.10ல் பிரசுராமான கட்டுரை.... ஒரு வழியாக மாகாத்மா காந்தியின் 141வது பிறந்த தினத்தையும் கொண்டாடித் தீர்த்துவிட்டோம். சும்மா சொல்லக்கூடாது. குளு குளு நடிகைகள் ‘கொஞ்சும் தமிழில்’ பேசும் பேட்டி என்ன, புதிய திரைப்படங்கள் குறித்த வசீகர விமர்சனங்கள் என்ன… இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றின் சிலமாதங்களுக்கு முன்னரே வந்த திரைப்படங்கள் என்ன… என   இப்படிப் பல என்ன என்னக்களோடு, கோவணமும், கைத்தடியுமாய் அலைந்த காந்தியின் பிறந்தநாளை டிஜிட்டல் குவாலிட்டியில் கொண்டாடித் தீர்த்துவிட்டோம். இவ்வளவு குதூகல கொண்டாட்ட களேபரங்களுக்கு இடையே, பெரியார் திராவிடர் கழகம் என்ற அமைப்பு திருச்சியில் நடத்திய தீண்டாமை ஒழிப்புப் பிரிவை இழுத்து மூடும் போராட்டம், நம் கவனத்தை ஈர்த்ததுடன், அழுத்தமான கவலைகளையும் ஏற்படுத்தியது. ஏன்… காமன்வெல்த் ஊழல்களைவிட மோசமாக நம்மை வெட்கித் தலைகுனிய வைத்தது என்று கூடச் சொல்லலாம். காந்தி அடிகள் தன் கடைசி மூச்சுவரை உச்சரித்துக் கொண்டிருந்த இலட்சியச் சொல், தீண்டாமை ஒழிப்பு. நமது கெடுவாய்ப்பு, அது இன்றுவரை இலட்சியமாக மட்டுமே இருந்து வருவதுதான்....

எழுச்சி நாயகர்களும் சில எச்சரிக்கைகளும்

நல்லவேளையாக ராகுல்காந்தி அப்படி ஒரு பதிலைச் சொன்னார். இல்லாவிட்டால், அரசியல் ஆர்வம் உள்ள பல இளைஞர்கள், தலைமைப் பதவிகளைப் பிடிக்க ஓமகுண்டங்கள் வளர்ப்பது, பாதயாத்திரை செல்வது, கோவிலுக்கு யானை வாங்கிக் கொடுப்பது போன்ற வழிகளை மட்டுமே கையாளத் தொடங்கி விடுவார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்தியப் பிரதேச மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல்காந்தி, போபாலில் செய்தியாளர்களைச் சந்தித்தார். நமது செய்தியாளர்களுக்கு, எப்போதுமே   வசீகரமான அரசியல் கதாநாயகர்களைக் கட்டி எழுப்புவதில் அலாதி ஆர்வம் உண்டு. அதன் அடிப்படையில் வருங்காலத்தில் நீங்கள் பிரதமராவதற்கு வாய்ப்பு உண்டா? என்று கேட்டுள்ளனர். வருங்காலத்தைப் பற்றி எப்படி இப்போது சொல்லமுடியும் என்று நழுவலாக அதற்கு அவர் பதில் அளித்துள்ளார். நமது செய்தியாளர்கள் மனம் தளராத விக்கிரமாதித்தர்களாயிற்றே! விடுவார்களா பின்னே? ‘பிரதமராகவேண்டும் என்று உங்களுக்கு தலையெழுத்து இருந்தால்….?’ என்று தலையெழுத்தைத் துணைக்கழைத்திருக்கிறார்கள். ‘அதற்கு அவர், தலைஎழுத்தில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. கடின உழைப்பை மட்டுமே நம்புகிறேன்’ என்று பதில் சொல்லி உள்ளார...