Skip to main content

Posts

Showing posts from August 4, 2011
எனது 20 களில் கவியரங்கம் ஒன்றிற்காக  எழுதப்பட்ட தமிழ் வாழ்த்து   அண்டம் பிறக்குமுன் ஆளப்பிறந்ததால் அகிலத்தில் பழமையானாய் - இன்று கண்டவர் எழுதியும் கலைநயம் மிளிர்வதால் புதுமைக்கும் புதுமையானாய் என்றோ பிறந்த நீ இன்றும் இளமையாய் இருப்பதும் மாயமன்றோ – ஆழி கொண்டும் அழிந்திடா குன்றாப் புகழினால் கொண்டபேர் நிலைக்குமன்றோ! முன்பு வளர்ந்தனை மூவகைச் சங்கத்தில் முத்தமிழ்ச் செல்வமென்றே – உந்தன் மூன்று குழந்தைகள் ஆண்ட பெருமையை முழங்கடி வந்து நின்றே அள்ளும் சிலம்பிலே வள்ளுவன் வாயிலே துள்ளுமுன் இளைய மேனி – பண்டை சொல்லும் அழகிலே சுவையின் வனப்பிலே வெல்லும் நீ மொழியில் ராணி! எண்ணத்திரையிலே ஏதோ கிறுக்கினாய் வண்ணங்கள் புரியவில்லை – எந்தன் இதயக் கதவினை எதுகொண்டு தட்டினாய் இன்னும் உறங்கவில்லை கன்னக் கதுப்பினில் கதைபல சொன்ன என் காதலி மறக்க வைத்தாய் – அவள் கலவியில் பிரிவினில் கண்டு மயங்கிய போதையை மாற்றிவிட்டாய் சின்னக் குழந்தையின் சித்திரம் போலொரு சன்ன ஒளிக்கீற்றாய் – என்னுள் மின்னிச் சிரித்திடும் மின்மினிக் கூட்டமாய்க் கண்ணைச் சிமிட்டி நின்றாய் உள்ளக் கருத...