அரசியல் பேசுவோம் - 13 - எம்.ஜி.ஆர் தோற்றம் குறித்து அண்ணாவுக்கு எழுந்த சந்தேகம்! : செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்)
Arasyal Pesuvom - 13 _________________________________________________________________________________ 1952ம் ஆண்டு தமிழகத்தை கடும் புயல் தாக்கியது. இதில் திருச்சி, தஞ்சை மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் திமுக திரை நட்சத்திரங்கள் மூலமாக நிதி திரட்டியது. கலைஞர் கருணாநிதியும், எம்.ஜி.ஆரும் இதற்கான பணியை முன்னெடுத்து 25 ஆயிரம் ரூபாய் நிதியைத் திரட்டி உள்ளனர். அப்போது நடைபெற்ற நிதியளிப்புக் கூட்டத்தில் எம்.ஜி.ஆரை டி.வி.நாராயணசாமி மூலம் தாம் சந்திக்க நேர்ந்த அனுபவத்தை அண்ணா மேடையில் பகிர்ந்து கொண்டார். முதன் முதலாக எம்.ஜி.ஆரைத் தாம் சந்தித்த போது அவர் பிராமணரோ எனத் தாம் சந்தேகித்ததாகவும், பின்னர் அவர் திராவிடர் என அறிந்து அகமகிழ்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். 1953ம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற திமுக மாநாட்டில், எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், என்.எஸ்.கிருஷ்ணன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், கே.ஆர்.ராமசாமி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே மேடையில் மின்னியது. எதிர்காலத்தில் திமுக அடைந்த வளர்ச்சிக்கு, இத்தகைய திரை நட்சித்தரங்களின் வர்ணஜால வசீகரம...