அரசியல் பேசுவோம் – 10 – தலைவரான பெரியார்… தளகர்த்தரான அண்ணா…! : செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்)
புதிய பதிவு.... Arasiyal pesuvom 10 ______________________________________________________________ காங்கிரசில் இருந்து வெளியேறிய பெரியார், 1937ம் ஆண்டு வரை சுயமரியாதை பிரச்சார இயக்கத்தை மட்டுமே நடத்தி வந்தார். வேறு எந்த அரசியல் கட்சியிலும் சேரவில்லை. பெரியார் சற்றே தமது கொள்கைகளில் சமரசம் செய்து கொண்டிருந்தால், அன்று முதலமைச்சராகவோ, சென்னை மாகாணத்தின் கவர்னர் ஜெனரலாகவோ ஆகியிருக்க முடியும். காங்கிரசிலும், மற்ற பெருந்தனக்காரர்கள் மத்தியிலும் அவருக்கு இருந்த செல்வாக்குக்கு பதவிகளைப் பெறுவது பொருட்டே இல்லை. ஆனால், சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை கண்டு நெகிழ்ந்த அவரது நெஞ்சம், பதவிகளையும், அதிகாரத்தையும் தூசாக எண்ணித் தூக்கியெறிந்தது. எளிய மக்களின் சமூக விடுதலை ஒன்றே தனது லட்சியமென அவரைத் துணிய வைத்தது. காங்கிரஸ் ஒழிப்பு என்ற அவரது பிரகடனம் வர்ணாசிரம ஒழிப்புக்கானதே தவிர, வெறும் கட்சி அரசியல் சார்ந்ததன்று. அதனால்தான் பின்னாளில் ஏழை பங்காளரான காமராஜர் தலைமையிலான காங்கிரசுக்கு பெரியார் தயக்கமின்றி ஆதரவளித்தார். இனி 30களின் நிகழ்வுகளுக்கு வருவோம். ...