Skip to main content

Posts

Showing posts from January 31, 2017
கவித் துளிகள்... பழுத்து உதிர்ந்த  இலையில் இருந்து நழுவி  என்மடியில் விழுந்து தவழ்ந்த  காலத்தின் பாடலில் திளைக்கிறேன் எனைத் தொல்லை செய்யாதீர் .......... என் புன்னகை விழுங்கி விடுமுன்  தப்பி விடு  உன் அகந்தை  உனைக் காக்குமெனில் ........... நீண்ட தூரம்  வலிகளின் ஊடாக  பயணித்த களைப்பில்  நிழலென நம்பி அமர்ந்து விட்டேன்  நச்சு மரத்தின் அடியில் ............. எல்லோரையும் போலத்தான் கிணற்று நீரில் தெரியும்  என் பிம்பத்தை  வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன் நழுவி உள்ளே விழுந்த தருணம் தான் தெரியவில்லை

மெரினா எழுச்சி – அரசியல் துறவு பயன் தருமா? : செம்பரிதி

ஜனவரி 24ம் தேதி இரவு. கடந்த சில நாட்களாக கடல் அலைகளுக்கு போட்டியாக ஆர்ப்பரித்து எழுந்து நின்ற இளைஞர் பெருந்திரளின் சிறு துளியாக இருள் கவிந்த மெரினாவில் சிலர் மட்டும்… போர் ஓய்ந்த பின்னரும் களத்தில் இருந்து வெளியேற விரும்பாத சில வீரர்களைப் போல… முகத்திலும், அகத்திலும் வெறுமை ததும்ப அங்கிருந்து அகன்றனர். ரேட்டிங்கிற்கான வாய்ப்பு இனி இல்லை என்பதாலோ, என்னவோ அதற்கு முன்னர் மெரினாவில் திரண்டிருந்த ஊடகப்படையும் அங்கிருந்து காணாமல் போயிருந்தது. ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததற்கான ஆணையைக் காட்டினால் மட்டுமே கலைந்து செல்வோம் என்பது அவர்களது கடைசிக் கட்டக் கோரிக்கையாக இருந்தது. இறுதியாக காவல்துறை உயரதிகாரி (மயிலாப்பூர் துணை ஆணையர் பாலகிருஷ்ணன்) கூறிய சமாதானத்தை ஏற்று அங்கிருந்து கலைந்தனர். 8 நாட்களுக்கு முன்னர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகத் தொடங்கிய போராட்டம், அப்போதுதான் முடிவுக்கு வந்ததாக சில நாளேடுகள் மட்டும் செய்தி வெளியிட்டிருந்தன. கடைசி,, கடைசியாக கூடி நின்றவர்கள் அப்துல் கலாமின் படத்தை பதாகையாக உயர்த்திப் பிடி...