Skip to main content

Posts

Showing posts from March 10, 2011
தேர்தல் திருவிழாவில் காணாமல் போகும் விவசாயிகள்! தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பரபரப்பு அதன் உச்சக் கட்டத்தை நெருங்கி வருகிறது. கூட்டணி குறித்த கூட்டல், கழித்தல் கணக்குகள் முடிவுக்கு வந்து விட்ட நிலையில், வாக்குகளை அறுவடை செய்வதற்கான வியூகங்களை வகுக்கும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. தேர்தல் திருவிழாவில் உதிரிக்கட்சிகள் கூட உற்சாகத்துடன் வலம் வருகின்றன. சக்திக்குத் தகுந்த ‘சீட்டு’கள். இல்லாவிட்டால் ‘நிபந்தனையற்ற ஆதரவு’ என்ற  அறிவிப்புடன், அகப்பட்டதை சுருட்டி அரசியல் வியாபாரத்தில் லாபம் பார்த்துவிடுவது என்பதே அவர்களது அதிகபட்ச வேலைத்திட்டம். இப்படி, ஜாதி, வட்டாரம், தொழில் என ஏதோ ஓர் அடிப்படையில்  உதிரி இயக்கங்களாக ஒண்றிணைந்து, தேர்தல் காற்று வீசும்போதே தூற்றிக் கொள்ளத் தயாராகி விட்டன பல அமைப்புகள். ஆனால், கிராமப்புற வாக்குவங்கியின் பெரும்பான்மை எண்ணிக்கையாக இருக்கும் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு மட்டும் இந்த தேர்தல் கால செப்படி வித்தை எப்போதுமே சாத்தியமாவதில்லை. அறுபது ஆண்டுகால ஜனநாயகத்தில் எந்த நிறைவையும் எட்ட முடியாமல் தவிக்கும் சில சபிக்...