Skip to main content

Posts

Showing posts from April 23, 2016

சருகுகளின் விசும்பல் : மேனா.உலகநாதன் (கவிதை)

menaulaganathan’s poetry  __________________________________________________________________________________________ உலர்ந்து சிதறிக்கிடந்த சருகுகளுக்கு எனை வரவேற்பதில் உவப்பில்லை வேண்டா விருந்தாளியாகவே அந்த வெளிக்குள் நுழைந்தேன் எனினும் சருகுகள் மௌனமாகக் கிடந்து விடவில்லை பாதங்கள் படும்போதெல்லாம் விசும்பின ஏன் இத்தனை காலம் வராமல் போனாய்? பவளமல்லிச் செடியையும் மல்லிகைப் பந்தலையும் மட்டும் யாரோ பராமரிக்கிறார்கள் போலும் மற்றவை… பூச்செடிகளைப் பறித்தெறிவது காலத்தால் முடியாத காரியமா என்ன? முப்பது ஆண்டுகளுக்கு முன் பூத்துக் குலுங்கிய மலர்களின் வாசனை நாசிகளைத் தழுவியபோது நரம்புகள் கிளர்ந்தன நினைவோடையின் அடிஆழப் படிமங்களில் இருந்து கலங்கி மிதந்தது அவள் ஸ்பரிசம் _________________________________________________________________________________

அரசியல் பேசுவோம் – 9 – சமூக அநீதியே உருவாக்கிய சமூகநீதிப் போராளி! : செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்)

Arasiyal pesuvom – 9 _________________________________________________________________________________ 1949ம் ஆண்டு செப்டம்பர் 17ம் நாள். மழை பொழிந்து கொண்டிருந்த ஒரு மாலை நேரமது. சென்னை ராபின்சன் பூங்காவில் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கிய பெருமித உணர்வு பொங்க அதன் பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்ட அண்ணா பேசுகிறார். பெரியாருடன் ஏற்பட்ட பிளவு பற்றி பல்வேறு விளக்கங்களை ராபின்சன் பூங்காவில் ஆற்றிய அந்த உணர்ச்சி மிகு உரையில் அண்ணா விவரிக்கிறார். பெரியார் – மணியம்மை திருமண எதிர்ப்பு திமுகவின் உதயத்திற்கு உடனடிக் காரணமாகக் கருதப்பட்டாலும், ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை கருப்பு நாளாக அனுசரிக்கும் முடிவை அண்ணா எதிர்த்தது போன்ற வேறுபல முரண்பாடுகளும், இந்தப் பிரிவுக்கு பல ஆண்டுகளாகவே தூபம் போட்டிருப்பதை வரலாற்றுச் சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன. முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்வுக்கான பின்னணி என்பது ஓரிரு ஆண்டுகளில் உருவானதல்ல. பெரியாரின் தலைமையிலான திராவிடர் கழகத்தின் தளகர்த்தராக அண்ணா செயல்பட்டுக் கொண்டிருந்த போதே மெல்லிய ஊடலாகவும், உரசல்களாகவும் விழுந்த கீறல்கள...

அரசியல் பேசுவோம் – 8 – தமிழர்களின் வரலாற்று இழிவு! : செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்)

Arasiyal pesuvom – 8 _________________________________________________________________________________ 1991 ம் ஆண்டு முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்த ஜெயலலிதா, பார்த்த முதல் வேலை, எம்.ஜி.ஆருடன் இருந்த அல்லது அவரது விசுவசாசிகளாக கருதப்பட்ட கட்சியின் மூத்த புள்ளிகளை ஓரம் கட்டியதுதான். எஸ்.டி. சோமசுந்தரம், ஆர்.எம்.வீரப்பன், திருநாவுக்கரசு (தற்போது திருநாவுக்கரசர் – காங்கிரசில் இருக்கிறார்), கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன் என இந்தப் பட்டியல் நீண்டது. சசிகலா அன்கோவுக்கு நெருக்கமானவர்கள் கட்சியில் முக்கியத்துவம் பெறத் தொடங்கினர். எம்.ஜி.ஆர் காலத்தில் கொள்கையளவில் மட்டுமே குழப்பமான அமைப்பாகக் காணப்பட்ட அதிமுக, ஜெயலலிதாவின் கைக்கு மாறிய பின்னர் அரசியல், சமூக ரீதியான அனைத்துத் தார்மீக அறங்களையும் எந்தச் சங்கடமும் இன்றி உதறித் தள்ளிய லும்பர்களின் அமைப்பாக முழுவடிவம் பெற்றது. இதனை அறிந்து கொள்ள பெரிய ஆய்வுகள் எதையும் நடத்த வேண்டிய அவசியமில்லை. வளர்ப்பு மகன் சுதாகரன் ஆடம்பர திருமணம், பிளசன்ட் ஸ்டே ஹோட்டல், டான்சி விவகார வழக்குகள், சொத்துக் குவிப்பு வழக்கு, சு.சாமிக்கு எதிராக உயர்நீதிமன்றத...

அரசியல் பேசுவோம் – 7 – மரணம் தந்த பரிசு!: செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்)

அரசியல் பேசுவோம் – 7 – மரணம் தந்த பரிசு!: செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்) March 26, 2016 at 7:37 pm  admin   scroller ,  slider ,  top news ,  இலக்கியம் ,  கட்டுரைகள் ,  சிறப்பு பார்வை   89 views Arasiyal pesuvom - 7 ___________________________________________________________________________________________ எம்ஜிஆர் ஆட்சி நடத்திக் கொண்டிருந்த இடைப்பட்ட காலக்கட்டத்தில்தான் திரையுலக வாழ்வில் இருந்து ஒதுங்கி இருந்த ஜெயலலிதா, அரசியல் வாழ்க்கையில் பிரவேசித்தார். 1982ம் ஆண்டு அதிமுகவில் இணைந்த ஜெயலலிதாவை, அடுத்த ஆண்டே கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளராக எம்.ஜி.ஆர் நியமித்தார். சமூகநீதியின் போர்க்குரலாகவும், வர்ணாஸ்ரம தர்மத்தின் வேரான பார்ப்பனீயத்துக்கு எதிராகவும் தொடங்கப்பட்ட திராவிட இயக்கத்தில் இருந்து பிரிந்து வந்த ஒரு வெகுசனக் கட்சி, முழுமையாக ஒரு பார்ப்பனத் தலைமையிடமே கைமாற்றப்படுவதற்கான கால்கோள் அப்போதுதான் நடப்பட்டது. 1984ம் எம்ஜிஆர் உடல் நலம் பாதிக்கப்பட்டு, அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த நேரத்தில் நடைபெற...

அரசியல் பேசுவோம் – 6 – எம்.ஜி.ஆர் இடி அமீனாகப் பார்க்கப்பட்டது ஏன்? : செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்)

Arasiyal pesuvom – 6 : Chemparithi’s Article _________________________________________________________________________________ எம்.ஜி.ஆரின் ஆட்சியை பொற்காலத்துக்கு ஒப்பிட்டும், ஜெயலலிதா அவரைப் போல் இல்லை என்றும் பலர் தற்போது விமர்சிப்பதைக் காண முடிகிறது. ஆனால், ஜெயலலிதாவின் தற்போதைய அனைத்து அரசியல் விகாரங்களுக்கும் பிதாமகராகவும் வழிகாட்டியாகவும் இருப்பவர் எம்ஜிஆரே! கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் லஞ்ச லாவண்யம் தலைவிரித்தாடுவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர். அதனை எந்த வகையிலும் கட்டுப்படுத்தவில்லை. மாறாக அனைத்து லஞ்ச லாவண்ய நடவடிக்கைகளுக்கும் ஒற்றைச்சாளர ஊற்றுக்கண்ணாக அவரே விளங்கினார். அவருக்குத் தெரியாமல் வேறு யாரும் அதில் “பங்குபெற” முடியாது என்ற பரிணாம நிலையே அவரது சாதனை! தனது திரைப்படங்களில் மதுவுக்கு எதிராக கடும் பிரச்சாரத்தை மேற்கொண்டவர் எம்ஜிஆர், ஆனால், கலைஞர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் ரத்து செய்யப்பட்டு மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்ட மதுவிலக்கை தமது இரண்டாம் கட்ட ஆட்சிக்காலத்தில் ரத்து செய்தார். (அண்ணா ஆட்சிக்காலம் முதல் நடைமுறையில் இருந்த மதுவில...