ஆனாலும்... திரும்பிப் பார்க்க என்ன இருக்கிறது ஆனாலும் பார்க்கிறேன் பசுஞ்சோலை பூமரங்கள் குளிர்ந்த நீரூறும் சுணை மெல்லிய காற்று இதமான வெயி்ல் அழகிய பெண்கள் என் வழியில் இப்படி எதுவும் தென்பட்டதில்லை இருந்தாலும் என்ன கடப்பும் நடப்பும் தொடர்கிறது ..................... என் புன்னகையின் வெறுமை உங்களைச் சங்கடப் படுத்தக் கூடும் எனை மறைத்துக் கொள்ளும் சாகசம் அது வேறென்ன செய்ய சிரிப்பென்ன வேண்டிக் கிடக்கிறது கேள்வி சரிதான் பதிலாகவும் சிரிப்புதான் வருகிறது அழுவதற்குக் கூடக் கற்றுத் தராத 50 ஆண்டுகால வாழ்வின் மீகு கோபமாய் வருகிறது. ....................... சரி .... புறப்படுவோம் உரையாடலை முடிக்காமலே பிரியும் வலி நாட்கள் மாதங்கள் ஆண்டுகள் என வாழ்வின் நிழலாக தொடரும் நமது உரையாடல் வழியாக எந்த ஜன்னலும் திறக்கவில்லை உயிரற்ற சொற்களின் அடர்த்தியில் கைகள் குலுக்க முடியாமல் கனத்துப் போயின குரூரமும், துரோகமும், வஞ்சனையும் கனன்றடங்கிச் சாம்பலென உதிரும் உன் வார்த்தைகள் படிந்து மங்கியது என் மனவெளி எனினும் என்ன தொண்டைக்கும் வயிறுக்குமாய் உருளும் இ...