'ஹெல்த்சாய்ஸ்' மருத்துவ மாத இதழுக்காக (நவம்பர்) 'நமக்குள்ளே…' என்ற தலைப்பில் எழுதப்பட்ட தலயங்கம்... நமது நாட்டில், 70 சதவீதம் மக்கள், நாளொன்றுக்கு 20 ரூபாய் மட்டுமே வருவாய் உள்ளவர்களாக உயிர் வாழ்ந்து வருகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதே நாட்டில் 7 ஆயிரம் டன் உணவுதானியம், மத்திய அரசின் உணவுக்கழக கிடங்கில் புழுவைத்துக் கெட்டுப்போன நிலையில் கிடக்கிறது என்றால் அதனை என்னவென்று சொல்வது? மத்திய அரசின் உணவுக் கழக கிடங்கில், கெட்டுப் போய் வீணாகும் பல ஆயிரம் கோடி டன் உணவு தானியங்களை, ஏழைகளுக்கு இலவசமாக வழங்க உத்தரவிடுமாறு, மக்கள் உரிமைக் கழகம், பல ஆண்டுகளுக்கு முன்னர் உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், வீணாகும் தானியங்களை ஏன் ஏழைகளுக்கு வழங்கக் கூடாது என கேள்வி எழுப்பினர். அப்படி எல்லாம் வழங்க சட்டம் இடம் கொடுக்காது என மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த வழக்கு கடந்த மாதம் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ‘அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் 67 ஆயிரம் டன் உணவு தானியம் வீணாகி உள்ளது. மத்திய அரசின் உணவுதானியக் கிடங்...