Skip to main content

Posts

அவர்கள் காத்திருக்கிறார்கள்! “ஆ வீன மழைபொழிய இல்லம்வீழ..! அகத்தடியாள் மெய்நோவ‌ அடிமை சாக..! மாவீர‌ம் போகுதென்று விதைகொண்டோட‌..! வ‌ழியிலே க‌ட‌ன்கார‌ன் ம‌றித்துக் கொள்ள..! சாவோலை கொண்டொருவ‌ன் எதிரே தோன்ற‌..! த‌ள்ள‌வொணா விருந்துவ‌ர‌ ச‌ர்ப்பந்தீண்ட..! கோவேந்த‌ர் உழுதுண்ட‌ க‌ட‌மை கேட்க‌..! குருக்க‌ள் வ‌ந்து த‌ட்ச‌ணைக‌ள் கொடு என்றாரே..!!!” உழுதுண்டு வாழ்பவனின் அன்றாட வாழ்க்கை நெருக்கடியை, சித்தரிக்கும் விவேகசிந்தாமணி என்ற பழந்தமிழ் நூல் பாடல் வரிகள்தான் இவை. சம்சாரி என்றும் குடியானவன் என்றும் அந்நாட்களில் அழைக்கப்பட்ட ஏழை விவசாயி ஒருவனுக்கு, ஒரே நேரத்தில் நேரும் துயரங்கள்தான் எத்தனை? ‘மாடு கன்று போடுகிறது. அடை மழையோ கொட்டுகிறது. அந்த மழையால், குடியிருந்த வீடும் இடிந்து விழுகிறது. மனைவி திடீரென நோய்வாய்ப்படுகிறாள். உதவிக்கு இருந்த வேலையாளும் திடீரென இறந்து போகிறான். இத்தனை நெருக்கடிக்கு இடையேயும், மழை பெய்த ஈரம் காயுமுன்னே விதைத்துவிட வேண்டும் என்ற பதற்றத்துடன், விதையை எடுத்துக் கொண்டு வயலுக்கு ஓடுகிறான் அந்த விவசாயி. வழியிலே கடன்காரன் வந்து மறித்துக் கொள்கிறான். அதோடு முடிந்த...
என்ன குற்றம் செய்தார்கள்? ‘ நான் அப்போது நிறைமாத கர்ப்பிணி. மனிதக் கழிவுகளை அகற்றிக்கொண்டிருக்கும் போது நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டேன். அப்போது எவ்வளவு கதறியும் என்னை கை கொடுத்துத் தூக்க யாரும் முன்வரவில்லை. கழிவோடு கழிவாக புறக்கணிக்கப் பட்டேன். பொதுவாக எங்களைப் பார்த்தாலே மூக்கைப் பொத்திக் கொண்டு, இரண்டு கைகளையும் ஆட்டி போ, போ என்று கூறி விரட்டுகிறார்கள்’ அனிதா, பஞ்சாப் மாநிலம். ‘நான் பள்ளியில் படித்த போது என்னை மட்டும் வேறு தட்டு மற்றும் குவளை எடுத்துவரச் சொல்லி விரட்டுவார்கள். கேட்டால் என் தாயார் மனிதக் கழிவுகளை அகற்றும் வேலை பார்த்துவருகிறாராம். இன்று வரை பள்ளிகளில் என் போன்ற குழந்தைகளுக்கு இந்த கொடுமை தொடர்கிறது. எங்கள் பிள்ளைகள் ஏன் பெரிய படிப்பு படிக்க முடியவில்லை. கலெக்டர் ஆக முடியவில்லை….’ உமையாள், தமிழ்நாடு. டெல்லியில் சஃபாய் கர்மாச்சாரி அந்தோலன் ( Safai Karmachari Andolan) என்ற அமைப்பு சார்பில், சில மாதங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட பேரணியில் கலந்து கொண்ட பெண்களிடமிருந்து பீறிட்ட, ஆயிரமாண்டுகால ரணத்தின் ரத்தம் தோய்ந்த வார்த்தைகள்தான் இவை. இந்த பேரணியில...
30-1-11 தினமலர் - செய்திமலர் நெல்லைப் பதிப்பில் வெளியான கட்டுரை விவசாய வளர்ச்சி என்பது…? நா ட்டின் உற்பத்தித் தேவையை நிறைவு செய்ய, மற்றுமொரு பசுமைப்புரட்சி தேவை என்று குடியரசு தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் குடியரசுத்தலைவர் குறிப்பிட்டு இருப்பது, இயற்கை வேளாண் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.   வேலை இல்லாத்திண்டாட்டத்தை ஒழிப்போம்….. வறுமையை விரட்டுவோம். …. தீவிரவாதத்தை வேரறுப்போம்….. பொருளாதார வளர்ச்சியில் இரண்டு இலக்கப் புள்ளியை எட்டுவோம்… கடந்த அறுபது ஆண்டுகளாக பொதுப்புத்தியில் உரைய வைக்கப்பட்டுள்ள இது போன்ற ஏகோபித்த பிரகடனங்களை, சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்களில் குடுயரசுத்தலைவரோ, பிரதமரோ நாட்டு மக்களுக்கு ஆற்றும் உரையில் வெளியிடுவது ஒரு சடங்காக நீடித்து வருகிறது. அவற்றில் ஒன்றுதான் பசுமைப்புரட்சி தேவை என்று குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டீல் தெரிவித்துள்ள புளித்துப் போன பழங்கருத்தும். அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, உணவு உறுதித் திட்டத்தை விரிவு படுத்தும் முயற்சி… என உற்பத்தி சார்ந்த பல்வேறு நெருக்கடிக...
(23.1.11 தினமலர் செய்திமலரில் பிரசுரமான கட்டுரை)   நிலை குலைக்கும் விலை உயர்வு… இ ந்த மாதத்தில்மட்டும் இரண்டாவது முறையாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. விலை உயர்த்திக்கொள்ளும் அதிகாரம் எண்ணெய் நிறுவனங்களிடமே ஒப்படைக்கப்பட்ட பின்னர் இது எட்டாவது முறை. ஏற்கனவே வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு உள்ளிட்ட பொருட்களின் விலை தாறுமாறாக எகிறி, விண்ணைத் தொட்டுத்தொட்டு விளையாடிக் கொண்டிருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குப் பின்னர் இனி கேட்க வேண்டாம். ஏறுமுகம்தான்.   விலை உயர்வு என்பது ஏதோ ஒரு விதத்தில் கட்டுப்படுத்த முடியாத முரட்டுக் காளையாய், அரசுகளுடன் ஜல்லிக்கட்டு நடத்துகிறது. அது அரசே முன்னின்று நடத்தும் ஜல்லிக்கட்டாகவும் இருக்கிறது. ‘இப்படியே போனால் எங்கள் கதி என்னாவது’ என்ற சாமானியனின் கேள்விக்கு எந்த அரசியல் கட்சிகளிடமும் பதில் இல்லை. சாமான்ய மக்களை மத்திய அரசு பழிவாங்குகிறது என்று குற்றம் சாட்டும் பாரதிய ஜனதாவிடம் கூட, இதற்கான விளக்கம் இல்லை. விலை உயர்வுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவது குறித்து, இடதுசாரிகள் மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப் போவதாக...
(9.11.11 தினமலர் செய்திமலர் நெல்லைப் பதிப்பில் வெளிவந்த கட்டுரை) விரக்தியின் விளிம்பில்… நா ட்டில் விவசாயத்தைத் தொழிலாக கொண்டவர்களில் 45 சதவீதம் பேர் இந்தப் பிழைப்பே வேண்டாம் என்று நொந்து போய்ச் சொல்லுவதாக, பசுமைப் புரட்சியின் தந்தை என்று பாராட்டப்படும் தேசிய விவசாயிகள் ஆணையத்தின் தலைவர் எம்.எஸ். சுவாமிநாதன் அண்மையில் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஆச்சார்யா என்.ஜி. ரங்கா விவசாயப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட அவர், மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த போது இதனைக் கூறியுள்ளார் (Business Line, Dec – 30, 2010). எம்.எஸ். சுவாமிநாதன் தெரிவித்திருப்பதாலேயே இந்தக் கருத்து, பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தந்தையாக இருந்து அவர் பெற்றெடுத்த பசுமைப் புரட்சி குறித்து, பல்வேறு கருத்து வேறுபாடுகள் உண்டு. எனினும், இந்திய விவசாயத்துறை சார்ந்து, அதற்கான அதிகாரத்தளங்களில் இடம்பெற்று இயங்கி வருபவர் என்ற அளவில், விவசாயத்தின் நிலை குறித்து அவர் தெரிவிக்கும் கருத்துகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை மறுப்பதற்கில்லை. விவசாயம் குறித்த நவீன கருதுகோள்கள் அடை...

ஏறுவது விலை மட்டுமல்ல!

(2.1.11 தினமலர் - செய்திமலர் நெல்லைப் பதிப்பில் வெளிவந்தது)   ஏறுவது விலை மட்டுமல்ல ! க டந்த வாரம் முழுவதும், வெங்காயமும், தக்காளியும் அகில இந்திய அளவில் ஊடகங்களின் முக்கியப் பாடுபொருளானது. அவற்றின் கற்பனைக்கெட்டாத  விலை உயர்வு, நாட்டின் அடித்தட்டு மக்கள் முதல், ஆளுவோர் வரை அனைவரையும், ஒரு பூகம்பத்தைப் போல நடுங்க வைத்துவிட்டது. ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்துப் பேசிய பிரமுகர் இப்படிச் சொல்கிறார்… “முன்பெல்லாம் வீட்டு மனை பற்றிப் பேசும்போது செண்ட் கணக்கில் பேசுவார்கள். இப்போது சதுர அடிக்கணக்கில் தான் கூற முடிகிறது. அது போலவே கத்திரிக்காய், தக்காளி, வெங்காயம் போன்ற காய்கறிகளை இனி கடையில் சென்று கிலோ கணக்கில் கேட்கவோ வாங்கவோ முடியாது. 100 மிலி கிராம், 50 மிலி கிராம் என்ற அளவில் மட்டும் தான் கேட்க முடியும் போல….” அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்த சாமான்யர்களின் பேரதிர்ச்சியையே அவரது இந்தக் கருத்து பிரதிபலிக்கிறது.  வெங்காயத்தின் விலை உயர்வை ஒட்டி எழுந்த எதிர்ப்பைப் ப...