Skip to main content

Posts

இப்போது… பா றைகளின் மௌனம்  உங்களுக்குப் பிடிக்குமா அலைகளை விழுங்கிச் செரிக்கும்  அதன் உன்மத்தம் வாழ்வின் பருகத் தீராத மது மோதிச் சிதறும்  அலைத்துளிகளின் திவலைகள் தரும் போதத்தில்  இன்னும் இன்னும் இறுக்கம் கொண்டு புடைக்கும்  அதன் திமிர் ரசிக்கத் தீராத சாகசம் ஆங்காரத்துடன் வருவதும்  அடிபணிவதுமாய்த் திரும்பும் அலைகளின்  தோல்வியில் அதன் கம்பீரம்  மேலும் உயிர்க்கிறது எல்லோரும் நினைத்தார்கள் வாழ்வின் மூர்க்கம்  விளிம்பில் நிற்கும் எமை  வீழ்த்தி விடுமென்று எறும்பூரத் தேயும் கல்லோ  நாம் கரைவதற்கு காலம் சிதறுகிறது கடவுள் அழுகிறான் நம்பிக்கை அனைத்தும்  வற்றிப் போன கடலின் வெறுமை அவனைச் சஞ்சலம் கொள்ளச் செய்கிறது. இப்போது பாறையின் புன்னகைக்குள் அவன் மெல்லப் புதைகிறான். மேனா.உலகநாதன்
நெருடல் ----------------------------------------------------------------------- அவரைப் பார்த்தும் பாராதவனாய்த் திரும்பிக் கொண்டேன் பார்க்காமல் போகிறார் என்பதைப் பார்க்காமல் பார்த்திருக்கலாம்தான் கேள்வியும் பதிலும் உள் நெருடியது பார்த்தும் பாராமையை பார்த்தும் பாராமல் சென்ற அவரின் பக்குவம் பார்த்தும் பாராத நான்.   மேனா. உலகநாதன்
அம்மத்தாள் பக்கங்கள் படபடக்க எப்போதும் என்னுள் விரியும் நைந்து பழுப்பேறிப்போன பழந்தமிழ்ப் புத்தகம் நான் குழையும்போதெல்லாம் திறந்து கொள்ளும் அவளின் பொக்கைவாய்ச் சொர்க்க வாசல் மரணக்கதவுகளால் மூடப்பட்டும் மறுபடி மறுபடி மனசுதட்டும் அவள் நினைவசைவு அவள் தந்த கருவாடும் கஞ்சியும் கம்ப்யூட்டர் யுகத்தின் நாசிகள் அறியா வாசனை அற்புதம் சுருங்கிய தோல் மடிப்புகளுக்குள் நுழைந்தும் அலைந்தும் என் ஜீவன் நுகர்ந்த பந்தம் இன்னும் தேங்கிக் கசிகிறது உயிர்ச்சுனையில் கொட்டவும் முடியாமல் பத்திரப்படுத்தவும் முடியாமல் திரிந்து போன என் வாழ்வுப் பாலுடன் அவளது நினைவுகளும். மேனா. உலகநாதன்
வேண்டாம் விபரீத யோசனை! வ றுமை ஒழிப்பைப் போலவே விவசாய வளர்ச்சியும் இந்தியாவைப் பொறுத்தவரை நிறைவேறாத நெடுங்கனவாகவே இன்றளவும் நீடிக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அதற்கான பிரச்சனைகளும், தீர்வுகளும்,   ஒற்றைப் பரிமாணம் கொண்டவை அல்ல. இந்த நிலையில்,   விவசாயத்தை வளர்த்தெடுக்க, நவீன வேளாண் வித்தகர்கள் (!) சிலர் அண்மையில் முன்வைத்துள்ள திட்டம் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஈ ஃபார்ம் என்ற அமைப்பை நடத்திவரும் வெங்கட சுப்பிரமணியன் என்பவர் தெரிவித்திருக்கும் யோசனைகள் விபரீதமானவை என்கின்றனர் விவசாயிகள் சங்கத்தினர். அப்படி அவர் முன்வைக்கும் தீர்வும், திட்டமும்தான் என்ன? ‘விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதற்கு, அவற்றை கொள்முதல் செய்து சந்தைப்படுத்தும் பொறுப்பை, முழுக்கத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்து விட வேண்டும். இதில் தொழில்முறை இடைத்தரகர்களின் பங்கு மிக முக்கியமானது(!). 4 அல்லது 5 கிராமங்களுக்கு ஒரு நிறுவனத்தை   அவர்கள் தொடங்க அனுமதிக்க வேண்டும். அவற்றின் மூலம், விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களைக் கொள்ம...
புதிய பதிவு.... ஒளிர்ந்தும் ஒளிராத…. அன்று தீபாவளிப் பண்டிகை. நாடு முழவதும் பொங்கிப் பிரவகித்துக் கொண்டிருந்த கொண்டாட்ட ஒளிவெள்ளத்தின் சிறு கீற்று கூட அங்கு கூடியிருந்தவர்களின் முகத்தில் விழவில்லை. வறுமையின் இறுக்கமும், பசியின் தீவிரமும், கனத்த போர்வையைப் போல இருளின் வடிவில் அவர்கள் மீது ஒரு சேரக் கவிந்து படர்ந்திருந்தது.   ஆண்டுக்கு 100 நாள் வேலைத்திட்டத்திற்கான குறைந்த பட்சக் கூலியை 100 ரூபாய்க்கும் அதிகமாக உயர்த்தித் தரவேண்டும் என வலியுறுத்தி, தீபாவளிக் கொண்டாட்டத்தைப் புறக்கணித்து, ஜெய்ப்பூர் நகரின் ஓர் இடத்தில் கூடியிருந்த ராஜஸ்தான் மாநில விவசாயத் தொழிலாளர்கள் தான் அவர்கள். அக்டோபர் 2ம் தேதி முதல் கடந்த 17ம் தேதிவரை ஏறத்தாழ 47 நாட்கள், அவர்கள் நடத்திய இந்தத் தொடர் போராட்டத்திற்கு,   இறுதியில் வெற்றியே கிடைத்துள்ளது.   விவசாயத் தொழிலாளர்களின் இந்தப் போராட்டத்தால், பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்த அம்மாநில அரசு, அவர்களது கோரிக்கையை ஏற்று, கூலியை உயர்த்தித் தர ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில், அரசுதரப்பில் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், கை...
ப.சிதம்பரத்தின் ‘பயங்கர’ நினைவாற்றல்! ‘என் நினைவு கூறுவதில் இருந்து, 2010ம் ஆண்டில் தமிழக மீனவர் ஒருவர் மட்டும் உயிரிழந்துள்ளார். 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வேறு எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை’ கடந்த வாரம் சென்னை கோபாலபுரம் இல்லத்தில் முதலமைச்சர் கருணாநிதியைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சொன்ன இந்த வார்த்தைகள், ஏற்கனவே வெந்து நொந்து போயிருக்கும் தமிழக மீனவர்களின் மனப்புண்ணில் வேலைப் பாய்ச்சி வேதனைப்படுத்துவது போல் ஆகிவிட்டது. ப.சிதம்பரம் பட்டும் படாமல் சொன்ன அந்த சொற்கள், தமிழக மீனவர்கள் மத்தியில் ஆழமான காயத்தை ஏற்படுத்தி உள்ளன.  ‘அவர் மத்திய அமைச்சராக இருக்கலாம். ஆனால் அவர் பிறந்தது தமிழ் நாட்டில் தானே. அந்த அடிப்படையிலாவது அவர் தமிழக மீனவர்களின் பிரச்சனையில் கருணையும், கரிசனமும் காட்டக்கூடாதா? இலங்கைக் கடற்படையினரிடம் அடியும், உதையும் பட்டு, உடமைகளை இழந்து, ரத்தக் காயத்துடன் உயிர் பிழைத்தால் போதும் என அன்றாடம் கரைக்கு வந்து சேரும் தமிழக மீனவர்களின் கண்ணீரும், கதறலும் அவர் காதுகளில் விழவே இல்லையா? அவர் நினைவு ...
புதிய பதிவு.... மணல் எனும் மண்ணுயிர்… ம ணல்…. மனித இனத்தின் தொன்மைகள் அனைத்தையும் உள்வாங்கியபடி, பரந்தும், விரிந்தும், ஒடுங்கியும், வளைந்தும் நதியின் போக்கில் படிந்து கிடக்கும் காலத்தின் சுவடு. நதிகளின் வழியாகத்தான், மனித இனம் தன் நாகரிகத்தையும், பரிணாம வளர்ச்சியையும் தகவமைத்துள்ளது. ஆற்றங்கரையில் அமர்ந்து நண்பர்களுடன் அளவளாவிய அனுபவம் உள்ளவர்களால் மட்டுமே, மணலுக்கும், மனிதர்களுக்கும் உள்ள நுட்பமான உறவையும், அது கிளர்த்தும் உணர்வையும் புரிந்து கொள்ள முடியும். மனிதர்களுக்கும், நதிக்கும் இடையே உயிர்ப்பிணைப்பாக பின்னிக்கிடக்கும் மணல், தற்போது கட்டுமானப் பொருட்களில் ஒன்றாக மட்டுமே மதிக்கப்படுவதுதான் சோகம். இல்லாவிட்டால், மணல் கொள்ளை என்பது, போதைப் பொருள் கடத்தல், குழந்தைகள் கடத்தல், கூலிக்காக ஆட்களைக் கொல்லுதல் போன்றவற்றை எல்லாம் விட, குண்டர்களின் ஆதிக்கம் மிகுந்த கொலைத் தொழிலாக உருவெடுத்திருக்க முடியுமா? மணல் திருட்டைத் தடுக்கச் சென்ற அதிகாரிகளை மட்டுமே லாரி ஏற்றிக் கொன்றது பழைய நடைமுறை. இப்போதெல்லாம், எதிரில் யார் வந்தாலும், மோதிக் கொன்று ந...