Skip to main content

Posts

புதிய பதிவு.... தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில்…? ம த்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார் வழக்கம் போல எளிய மக்களுக்கு   எதிரான தன் திருவுளத்தை, மீண்டும் ஒருமுறை திறந்து காட்டி இருக்கிறார். அனைவருக்கும் உணவு என்ற இலக்கை அடைய, வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு மாதம் 35 கிலோ அரிசி அல்லது   கோதுமையும், மற்றவர்களுக்கு 20 கிலோவும், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மலிவு விலையில் வழங்க வேண்டும் என அண்மையில், சோனியாகாந்தி தலைமையிலான தேசிய ஆலோசனைக்குழு பரிந்துரை செய்தது. இதன் மூலம், கிராமப்புற, நகர்ப்புற ஏழைகள் அனைவருக்கும் தவறாமல் உணவுகிடைப்பதை உறுதிப்படுத்த முடியும் என நம்பப் பட்டது. ஆனால்…. உணவுக் கழக கிடங்குகளில் கெட்டு வீணாகும் தானியங்களை ஏழைகளுக்கு இலவசமாக வழங்கினால் என்ன என்று உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு, அதெப்படி முடியும் எனக் கொதித்தெழுந்த சரத்பவார், தற்போது தேசிய ஆலோசனைக் குழுவின் இந்தப் பரிந்துரைகளையும் புறந்தள்ளி இருக்கிறார். தேசிய ஆலோசனைக் குழுவின் பரிந்துரையை நிறைவேற்ற, ஆண்டுக்கு 610 லட்சம் டன் தானியம் கொள்முதல் செய்ய ...
புதிய பதிவு.... இனி என்ன செய்யப் போகிறீர்கள்? இமயமும் குமரியும் நிலைகுலைந்து நிற்கிறது. காஷ்மீரின் தால் ஏரி குங்குமமாய்ச் சிவந்து கிடக்கிறது. இளைஞர்களும், பெண்களும் இந்திய ராணுவத்தின் ஒடுக்கு முறைக்கு எதிராக வீசி எறிந்த கற்கள் மலை போல் குவிந்து எழுந்து நிற்கின்றன. அதன் மேல் நின்று உரத்துக் கூவுவதைப் போல் சொல்லி இருக்கிறார் அருந்ததி ராய்… ‘காஷ்மீர் ஒரு போதும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது இல்லை. இது ஒரு வரலாற்று உண்மை’ இன்னொரு பக்கம், தமிழக மீனவர்கள் அனைத்து நம்பிக்கையும் வற்றிப்போன நிலையில், சாட்சிக்காரனை விட சண்டைக்காரனே மேல் என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள். அடுத்த மாதம் 5ம் தேதி, இலங்கை அதிபர் ராஜபக்சேவைச் சந்தித்து, தங்கள் மீது நடத்தும் தாக்குதலை நிறுத்துமாறு கெஞ்சிக் கேட்க முடிவு செய்திருக்கிறார்கள். அருந்ததிராயின் வார்த்தைகளுக்காக கோபப்படும் நமது தேச பக்தர்கள், மீனவர்களின் இந்த முடிவுக்காக வெட்கப்படவில்லை. நொடிக்கு ஒரு முறை, இறையாண்மை குறித்து இரைச்சலிடும் இவர்களுக்கு, மீனவர்களின் இந்த நிலை குறித்து எந்தச் சங்கடமும் இல்லை. உலகின் மிக...
புதிய பதிவு.... மரபணு மாற்றவிதைகள் : சுகாதாரப் பிரச்சனை மட்டுமல்ல ம க்களை ஏமாற்றும் நமது அரசுகளின் மௌடீக நாடகங்களைப் பார்த்தால், திரைப்படங்களில், நகைச்சுவை நடிகர் வடிவேலு அவ்வப்போது சொல்லும் வசனம்தான் நம் நினைவுக்கு வருகிறது. ‘எதுன்னாலும் சொல்லிட்டுச் செய்ங்கப்பா!’ கடந்த 2002ம் ஆண்டிலேயே மரபணு மாற்றப் பருத்தி விதையை மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அனுமதித்த மத்திய அரசு, அண்மையில் கத்திரிக்காயையும், மரபணு மாற்றச் சந்தைச் சுழற்சிக்குள் தள்ளப் பார்த்தது. எதிர்பாராத தளங்களில் இருந்தெல்லாம் எதிர்ப்புக் கிளம்ப, தற்காலிகமாக மத்திய அரசு அதனைத் தள்ளிப் போட்டது. ஆனாலும், கத்திரிக்காய்க்கு வந்த ஆபத்து நீங்கி விட்டது என்றெல்லாம் சொல்ல முடியாது. அந்தக் கத்தி இன்னும் இந்திய விவசாயிகளின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில், மரபணு மா ற்றப் பயிர்கள் விவகாரத்தில், புதிதாக ஒரு சர்ச்சை இப்போது புறப்பட்டுள்ளது. அதாவது, மரபணு மாற்றப் பயிர்கள் மூலம் தயாரிக்கப்பட்டு, சந்தைக்கு வரும் பொருட்களின் உறை, அல்லது அட்டைகள் மீது அதற்கான அடையாள ம...

'ஹெல்த்சாய்ஸ்' மருத்துவ மாத இதழுக்காக (நவம்பர்) 'நமக்குள்ளே…' என்ற தலைப்பில் எழுதப்பட்ட தலயங்கம்...

நமது நாட்டில், 70 சதவீதம் மக்கள், நாளொன்றுக்கு 20 ரூபாய் மட்டுமே வருவாய் உள்ளவர்களாக உயிர் வாழ்ந்து வருகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதே நாட்டில் 7 ஆயிரம் டன் உணவுதானியம், மத்திய அரசின் உணவுக்கழக கிடங்கில் புழுவைத்துக் கெட்டுப்போன நிலையில்   கிடக்கிறது என்றால் அதனை என்னவென்று சொல்வது? மத்திய அரசின் உணவுக் கழக கிடங்கில், கெட்டுப் போய் வீணாகும் பல ஆயிரம் கோடி டன் உணவு தானியங்களை, ஏழைகளுக்கு இலவசமாக வழங்க உத்தரவிடுமாறு, மக்கள் உரிமைக் கழகம், பல ஆண்டுகளுக்கு முன்னர் உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், வீணாகும் தானியங்களை ஏன் ஏழைகளுக்கு வழங்கக் கூடாது என கேள்வி எழுப்பினர். அப்படி எல்லாம் வழங்க சட்டம் இடம் கொடுக்காது என மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த வழக்கு கடந்த மாதம் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ‘அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் 67 ஆயிரம் டன் உணவு தானியம் வீணாகி உள்ளது. மத்திய அரசின் உணவுதானியக் கிடங்கில், 7 ஆயிரம் டன் மட்டுமே கெட்டுப் போய் உள்ளது’ என மத்திய அரசு வழக்கறிஞர் பெருமிதம் (?) பொங்கக் கூறியுள்ளார். க...

தீண்டப்படாத தீண்டாமை ஒழிப்பு!

கடந்த 3.10.10ல் பிரசுராமான கட்டுரை.... ஒரு வழியாக மாகாத்மா காந்தியின் 141வது பிறந்த தினத்தையும் கொண்டாடித் தீர்த்துவிட்டோம். சும்மா சொல்லக்கூடாது. குளு குளு நடிகைகள் ‘கொஞ்சும் தமிழில்’ பேசும் பேட்டி என்ன, புதிய திரைப்படங்கள் குறித்த வசீகர விமர்சனங்கள் என்ன… இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றின் சிலமாதங்களுக்கு முன்னரே வந்த திரைப்படங்கள் என்ன… என   இப்படிப் பல என்ன என்னக்களோடு, கோவணமும், கைத்தடியுமாய் அலைந்த காந்தியின் பிறந்தநாளை டிஜிட்டல் குவாலிட்டியில் கொண்டாடித் தீர்த்துவிட்டோம். இவ்வளவு குதூகல கொண்டாட்ட களேபரங்களுக்கு இடையே, பெரியார் திராவிடர் கழகம் என்ற அமைப்பு திருச்சியில் நடத்திய தீண்டாமை ஒழிப்புப் பிரிவை இழுத்து மூடும் போராட்டம், நம் கவனத்தை ஈர்த்ததுடன், அழுத்தமான கவலைகளையும் ஏற்படுத்தியது. ஏன்… காமன்வெல்த் ஊழல்களைவிட மோசமாக நம்மை வெட்கித் தலைகுனிய வைத்தது என்று கூடச் சொல்லலாம். காந்தி அடிகள் தன் கடைசி மூச்சுவரை உச்சரித்துக் கொண்டிருந்த இலட்சியச் சொல், தீண்டாமை ஒழிப்பு. நமது கெடுவாய்ப்பு, அது இன்றுவரை இலட்சியமாக மட்டுமே இருந்து வருவதுதான்....