Skip to main content

Posts

அந்தக் காலத்தில் அண்ணா ஆட்சி பற்றி மேனா உலகநாதன் பேட்டி | Maena Ulagana...

அகற்றப்படுமா அரசியல் குப்பைகள்? : செம்பரிதி

(நடப்பு.காம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது) 1 988 ஆம் ஆண்டுக்குப் பின்னர், அதே கட்சியில் அதே காட்சிகள் அரங்கேறி வருகின்றன. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். 1972ஆம் ஆண்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட எம்.ஜி.ஆர், கருணாநிதி என்ற தனிமனிதருக்கு எதிராக, அவரை வசைபாடி இசை பெறுவதற்காகவே தொடங்கப்பட்ட கட்சி. அன்றைய மத்திய அரசின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி, பின்னர் அதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமாக பெயர் மாற்றம் செய்தார் எம்.ஜி.ஆர். ஆக, அஇஅதிமுக என்பது கொள்கை முரணால் பிறந்த கூரிய கருத்தியலை அடிப்படையாக கொண்ட இயக்கமல்ல. தனிமனித காழ்ப்பால் மட்டுமே பிறந்த வாக்குவேட்டைக் கட்சி அது. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, கருணாநிதி எதிர்ப்பாளர்களுக்கு வாளாகவும், கேடயமாகவும் பயன்பட்டு வரும் மலிவுவிலை அரசியல் ஆயுதம் என்பதே, அதிமுகவின் உண்மையான அடையாளம். அன்றைய இடதுசாரிகள், அதற்குப் பின்னால் வந்த வைகோ, அதற்குப் பின்னர் பழ.நெடுமாறன், தற்போது சீமான், வேல்முருகன் போன்றோர் என அதிமுக ஆதரவாளர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்வதன் அடிப்படையும் அதுதான்...

எங்கே அந்த சூரியன்?

(தாகம் இதழுக்காக எழுதப்பட்ட கட்டுரையின் முழுமையான வடிவம்... உடன்பிறப்புகள் கலைஞருக்கு எழுதுவதாக எழுதப்பட்டது)   ‘அ ம்பாள் எப்போதடா பேசினாள்… அறிவு கெட்டவனே…’ ‘ராமர் எந்தக் கோவிலில் பொறியியல் படித்தார்’ இந்தக் கேள்விகளை இந்தியாவில் உள்ள எந்தத் தலைவனாலாவது இன்று கேட்க முடியுமா? புராண, இதிகாச பொய்களைக் கட்டவிழ்த்து விட்டபடி, சுவாமி… நாதா… என்று பிதற்றிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவின் உச்சி மண்டையில் அடித்து நீ எழுப்பிய அந்த முதல் கேள்வியில் பழமைவாதிகள் நிலைகுலைந்ததை பழங்கணக்கெற்று  ஒதுக்கிவிட முடியுமா? அதற்குப் பிறகு சுமார் 50 ஆண்டுகள் கடந்த பின்னர், பகுத்தறிவுக் காரமும், தீரமும் சற்றும் குறையாமல், சேதுசமுத்திரத் திட்டத்திற்கு எதிராக ராமர்பாலம் என்ற கற்பனையை முன்வைத்த இந்துத்துவ மூர்க்கர்கள் இடிந்து போகும் வகையில் நீ எழுப்பியதுதானே அந்த இரண்டாவது கேள்வி. தமிழ்ச் சமூகத்தை, பொய்ம்மைகளின் மயக்கத்தில் இருந்து விழித்தெழ வைத்து, அறிவு வெளிச்சம் பெருக்கெடுக்கும் பெருவெளிக்கு இழுத்து வர வேண்டும் என்பதற்காக இதே போன்ற எத்தனையோ கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருப்பா...
கவித் துளிகள்... பழுத்து உதிர்ந்த  இலையில் இருந்து நழுவி  என்மடியில் விழுந்து தவழ்ந்த  காலத்தின் பாடலில் திளைக்கிறேன் எனைத் தொல்லை செய்யாதீர் .......... என் புன்னகை விழுங்கி விடுமுன்  தப்பி விடு  உன் அகந்தை  உனைக் காக்குமெனில் ........... நீண்ட தூரம்  வலிகளின் ஊடாக  பயணித்த களைப்பில்  நிழலென நம்பி அமர்ந்து விட்டேன்  நச்சு மரத்தின் அடியில் ............. எல்லோரையும் போலத்தான் கிணற்று நீரில் தெரியும்  என் பிம்பத்தை  வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன் நழுவி உள்ளே விழுந்த தருணம் தான் தெரியவில்லை

மெரினா எழுச்சி – அரசியல் துறவு பயன் தருமா? : செம்பரிதி

ஜனவரி 24ம் தேதி இரவு. கடந்த சில நாட்களாக கடல் அலைகளுக்கு போட்டியாக ஆர்ப்பரித்து எழுந்து நின்ற இளைஞர் பெருந்திரளின் சிறு துளியாக இருள் கவிந்த மெரினாவில் சிலர் மட்டும்… போர் ஓய்ந்த பின்னரும் களத்தில் இருந்து வெளியேற விரும்பாத சில வீரர்களைப் போல… முகத்திலும், அகத்திலும் வெறுமை ததும்ப அங்கிருந்து அகன்றனர். ரேட்டிங்கிற்கான வாய்ப்பு இனி இல்லை என்பதாலோ, என்னவோ அதற்கு முன்னர் மெரினாவில் திரண்டிருந்த ஊடகப்படையும் அங்கிருந்து காணாமல் போயிருந்தது. ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததற்கான ஆணையைக் காட்டினால் மட்டுமே கலைந்து செல்வோம் என்பது அவர்களது கடைசிக் கட்டக் கோரிக்கையாக இருந்தது. இறுதியாக காவல்துறை உயரதிகாரி (மயிலாப்பூர் துணை ஆணையர் பாலகிருஷ்ணன்) கூறிய சமாதானத்தை ஏற்று அங்கிருந்து கலைந்தனர். 8 நாட்களுக்கு முன்னர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகத் தொடங்கிய போராட்டம், அப்போதுதான் முடிவுக்கு வந்ததாக சில நாளேடுகள் மட்டும் செய்தி வெளியிட்டிருந்தன. கடைசி,, கடைசியாக கூடி நின்றவர்கள் அப்துல் கலாமின் படத்தை பதாகையாக உயர்த்திப் பிடி...

அரசியல் பேசுவோம் -14 – அண்ணா நிகழ்த்திய அரசியல் வேதிவினை! : செம்பரிதி

1962ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி காமராஜர், மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சரானார். பக்தவச்சலம், கக்கன் உள்ளிட்டோர் அவரது அமைச்சரவையில் இடம்பெற்றனர். திருச்செங்கோடு இடைத்தேர்தலில் திமுக பெற்ற வெற்றி மாநில காங்கிரசாரை மட்டுமின்றி, மத்தியில் உள்ளவர்களையும் மலைக்க வைத்தது. விளைவு பிரிவினை கட்சிகளை சட்டவிரோத இயக்கமாக அறிவிக்கும் மசோதாவை காங்கிரஸ் அரசு நிறைவேற்றியது. நாடாளுமன்றத்தில் அதனை அண்ணா எதிர்த்துப் பேசினாலும், மசோதா நிறைவேற்றத்தைத் தடுக்க முடியவில்லை. அடுத்த கட்டமாக பிரிவினைத் தடைச்சட்டத்தை எதிர்கொள்வதற்கான வியூகத்தை வகுகக் வேண்டிய நெருக்கடி அண்ணாவுக்கு ஏற்பட்டது. கட்சியினரைத் தனித்தனியாகவும் ,அமைப்பு ரீதியாகவும், குழுக்களாகவும் அழைத்து பிரிவினைத் தடைச்சட்டம் குறித்து ஆலோசனை நடத்தினார் அண்ணா. கட்சியின் அடிப்படை விதிகளில் ஒன்றாக இருந்த திராவிடநாடு கோரும் பிரிவைத் திருத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதை அவர்களுக்கு எடுத்துரைத்தார். முடிவாக 1963ம் ஆண்டு நவம்பர் மாதம் கட்சியின் செயற்குழுவைக் கூட்டினார். அதில் திராவிட நாட்டை வலியுறுத்தும் கட்சியின் 2வது விதி திருத்தப்பட்டது. “தமிழகம...