கவித் துளிகள்...
பழுத்து உதிர்ந்த
இலையில் இருந்து நழுவி
என்மடியில் விழுந்து தவழ்ந்த
காலத்தின் பாடலில் திளைக்கிறேன்
எனைத் தொல்லை செய்யாதீர்
..........
என் புன்னகை விழுங்கி விடுமுன்
தப்பி விடு
உன் அகந்தை
உனைக் காக்குமெனில்
...........
நீண்ட தூரம்
வலிகளின் ஊடாக
பயணித்த களைப்பில்
நிழலென நம்பி அமர்ந்து விட்டேன்
நச்சு மரத்தின் அடியில்
.............
எல்லோரையும் போலத்தான்
கிணற்று நீரில் தெரியும்
என் பிம்பத்தை
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்
நழுவி உள்ளே விழுந்த தருணம் தான் தெரியவில்லை
பழுத்து உதிர்ந்த
இலையில் இருந்து நழுவி
என்மடியில் விழுந்து தவழ்ந்த
காலத்தின் பாடலில் திளைக்கிறேன்
எனைத் தொல்லை செய்யாதீர்
..........
என் புன்னகை விழுங்கி விடுமுன்
தப்பி விடு
உன் அகந்தை
உனைக் காக்குமெனில்
...........
நீண்ட தூரம்
வலிகளின் ஊடாக
பயணித்த களைப்பில்
நிழலென நம்பி அமர்ந்து விட்டேன்
நச்சு மரத்தின் அடியில்
.............
எல்லோரையும் போலத்தான்
கிணற்று நீரில் தெரியும்
என் பிம்பத்தை
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்
நழுவி உள்ளே விழுந்த தருணம் தான் தெரியவில்லை
Comments
Post a Comment