Arasiyal pesuvom – 5 இருண்ட காலத்திலும் வெளிச்சம் தேடிக் கொண்ட எம்.ஜி.ஆர்! _________________________________________________________________________________ காலச்சக்கரம் வேகமாகச் சுழன்றது. “கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்…” என மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் (எம்.ஜி.ஆர் முழுமையாக நடித்து வெளிவந்த கடைசித் திரைப்படம் இதுதான்) படத்தில் இடம் பெற்ற பாடல், மிக விரைவிலேயே உண்மையாகப் போகிறது என அப்போது பலரும் எதிர்பார்க்கவில்லை. ஜனநாயகம் என்ற அரசியல் வடிவத்தின் அழகும், அவலமும், புதிரும் அதுதான். 1975ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியால் அறிவிக்கப்பட்ட அவசரநிலைப் பிரகடனம், இந்திய அரசியலை மட்டுமின்றி, தமிழக அரசியலையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டது. இந்திராகாந்தியின் அவசரநிலைப் பிரகடனத்தை, திமுக கடுமையாக எதிர்த்தது. எம்.ஜி.ஆர் முழுமூச்சுடன் ஆதரித்தார். அவரைத் தலைவராக உருவெடுக்க வைக்க அரும்பாடு பட்டுக் கொண்டிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அவசர நிலைப் பிரகடனத்தை ஆதரித்தது. வலதுசாரிகளை வீழ்த்துவதற்காக அவசரநிலையை ஆதரிக்கிறோம் என அக்கட்சியின் அப்போதைய தேசியத் தலைவர் ...