Skip to main content

Posts

19.12.2010 தினமலர் - செய்திமலர் (நெல்லைப் பதிப்பு) ல் வெளியான கட்டுரை   ஜனநாயகத்தின் சண்டாளர்கள்! அ லைவரிசை ஒதுக்கீட்டுப் புகாரை முன்னிறுத்தி நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளை, வட இந்திய ஊடகங்கள், ஆங்கிலமா ஹிந்தியா என அடையாளம் கண்டறிய முடியாத வினோதமொழியில்,   விலாவாரியாகக் கடைவிரித்துக் கொண்டிருந்தன. அந்த ஜனநாயக சங்கடத்தைப் பார்த்த படியே நாளேட்டைப் புரட்டிய போது கண்ணில் பட்ட மற்றொரு செய்தி, அத்தகைய சங்கடத்தை மேலும் அதிகப்படுத்தியது. மகாராஷ்டிரா மாநிலத்தின் விதார்பா மாவட்ட விவசாயிகளுக்கு அப்போதையை முதலமைச்சரே இழைத்த கொடுமை குறித்து, உச்சநீதிமன்றம் தெரிவித்த கண்டனம் தொடர்பான செய்திதான் அது. விதார்பா மாவட்டத்தை அத்தனை சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது. 1997 முதல், 2008ம் ஆண்டு முடிய சுமார் பத்து ஆண்டுகளில், அந்த மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த  2 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டனர். மனித வரலாற்றிலேயே, குறிப்பிட்ட ஒரு பிரச்சனை தந்த அழுத்தத்தால் இத்தனை பேர் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு நட...
தொடக்கம் முடிவின் பயணம் தொடங்கிவிட்டது அதன் வாலைப் பிடித்தபடியே பின்தொடரும் எனது வழி… ஒற்றையடிப் பாதையாய் குறுகலான செடிப்புதர்களாய் மேடும் பள்ளமுமாய் கற்களும் முற்களுமாய் அவ்வப்போது அகன்ற சாலையும்… சுவடுகளைத் திரும்பிப் பார்க்க மனமின்றி பயணிக்கும் எனது மூர்க்கம் வேட்கை தணிந்து இளைப்பாறுவது எப்போது….? மேனா.உலகநாதன்
மாற்றி யோசிக்கலாமே……. ‘வ ரப்புயர நீருயரும் நீருயர நெல்லுயரும் நெல்லுயரக் குடிஉயரும் குடிஉயரக் கோனுயர்வான்’ விவசாயம் எனும் உயிர்த்தொழிலின் அவசியத்தை உணர்த்த, தமிழ் மூதாட்டி ஔவை சொல்லி வைத்த அறவுரை இது. நவீனத்தின் பாய்ச்சலில், எத்தனையோ தொன்மங்களும், விழுமியங்களும் அர்த்தம் இழந்து வரும் நிலையில், ஔவையின் இந்த மூதுரை மட்டும், நம் மண்ணின் அறமாக இன்றும் நீடித்து வருகிறது. என்னதான் நவீனப் பொருளாதாரப் புலிகள் அதை இல்லை என அடிக்கப்பார்த்தாலும், இந்த நாட்டின் முதல் தொழிலாகவும், முழுத்தொழிலாகவும் விவசாயமே இன்றுவரை நிலைத்து வருகிறது. ஆனால், இயற்கையின் சுழற்சி அப்படியே நீடிக்கவில்லை. அதில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. புவி வெப்பமயமாதல் காரணமாக, பருவநிலையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வருவதை நாம் கண்கூடாகக் காண முடிகிறது. வடமேற்கு, வடகிழக்கு பருவமழைக் காலங்கள் உரிய காலத்தில் தொடங்கி உரிய காலத்தில் முடிவது இல்லை.     ‘பெய்தும் கெடுக்கும், பெய்யாமலும் கெடுக்கும்’ என்ற விவசாயப் பெருமக்களின் வழக்கு மொழி முன்னெப்போதையும் விட, அண்மைக்காலமாக மெய்யாகி வருகிறது.   ஆண்டு தோறும், சம்பா பரு...
இப்போது… பா றைகளின் மௌனம்  உங்களுக்குப் பிடிக்குமா அலைகளை விழுங்கிச் செரிக்கும்  அதன் உன்மத்தம் வாழ்வின் பருகத் தீராத மது மோதிச் சிதறும்  அலைத்துளிகளின் திவலைகள் தரும் போதத்தில்  இன்னும் இன்னும் இறுக்கம் கொண்டு புடைக்கும்  அதன் திமிர் ரசிக்கத் தீராத சாகசம் ஆங்காரத்துடன் வருவதும்  அடிபணிவதுமாய்த் திரும்பும் அலைகளின்  தோல்வியில் அதன் கம்பீரம்  மேலும் உயிர்க்கிறது எல்லோரும் நினைத்தார்கள் வாழ்வின் மூர்க்கம்  விளிம்பில் நிற்கும் எமை  வீழ்த்தி விடுமென்று எறும்பூரத் தேயும் கல்லோ  நாம் கரைவதற்கு காலம் சிதறுகிறது கடவுள் அழுகிறான் நம்பிக்கை அனைத்தும்  வற்றிப் போன கடலின் வெறுமை அவனைச் சஞ்சலம் கொள்ளச் செய்கிறது. இப்போது பாறையின் புன்னகைக்குள் அவன் மெல்லப் புதைகிறான். மேனா.உலகநாதன்
நெருடல் ----------------------------------------------------------------------- அவரைப் பார்த்தும் பாராதவனாய்த் திரும்பிக் கொண்டேன் பார்க்காமல் போகிறார் என்பதைப் பார்க்காமல் பார்த்திருக்கலாம்தான் கேள்வியும் பதிலும் உள் நெருடியது பார்த்தும் பாராமையை பார்த்தும் பாராமல் சென்ற அவரின் பக்குவம் பார்த்தும் பாராத நான்.   மேனா. உலகநாதன்
அம்மத்தாள் பக்கங்கள் படபடக்க எப்போதும் என்னுள் விரியும் நைந்து பழுப்பேறிப்போன பழந்தமிழ்ப் புத்தகம் நான் குழையும்போதெல்லாம் திறந்து கொள்ளும் அவளின் பொக்கைவாய்ச் சொர்க்க வாசல் மரணக்கதவுகளால் மூடப்பட்டும் மறுபடி மறுபடி மனசுதட்டும் அவள் நினைவசைவு அவள் தந்த கருவாடும் கஞ்சியும் கம்ப்யூட்டர் யுகத்தின் நாசிகள் அறியா வாசனை அற்புதம் சுருங்கிய தோல் மடிப்புகளுக்குள் நுழைந்தும் அலைந்தும் என் ஜீவன் நுகர்ந்த பந்தம் இன்னும் தேங்கிக் கசிகிறது உயிர்ச்சுனையில் கொட்டவும் முடியாமல் பத்திரப்படுத்தவும் முடியாமல் திரிந்து போன என் வாழ்வுப் பாலுடன் அவளது நினைவுகளும். மேனா. உலகநாதன்
வேண்டாம் விபரீத யோசனை! வ றுமை ஒழிப்பைப் போலவே விவசாய வளர்ச்சியும் இந்தியாவைப் பொறுத்தவரை நிறைவேறாத நெடுங்கனவாகவே இன்றளவும் நீடிக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அதற்கான பிரச்சனைகளும், தீர்வுகளும்,   ஒற்றைப் பரிமாணம் கொண்டவை அல்ல. இந்த நிலையில்,   விவசாயத்தை வளர்த்தெடுக்க, நவீன வேளாண் வித்தகர்கள் (!) சிலர் அண்மையில் முன்வைத்துள்ள திட்டம் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஈ ஃபார்ம் என்ற அமைப்பை நடத்திவரும் வெங்கட சுப்பிரமணியன் என்பவர் தெரிவித்திருக்கும் யோசனைகள் விபரீதமானவை என்கின்றனர் விவசாயிகள் சங்கத்தினர். அப்படி அவர் முன்வைக்கும் தீர்வும், திட்டமும்தான் என்ன? ‘விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதற்கு, அவற்றை கொள்முதல் செய்து சந்தைப்படுத்தும் பொறுப்பை, முழுக்கத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்து விட வேண்டும். இதில் தொழில்முறை இடைத்தரகர்களின் பங்கு மிக முக்கியமானது(!). 4 அல்லது 5 கிராமங்களுக்கு ஒரு நிறுவனத்தை   அவர்கள் தொடங்க அனுமதிக்க வேண்டும். அவற்றின் மூலம், விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களைக் கொள்ம...